ஞாயிறு, 2 அக்டோபர், 2011

என்றும் எங்கள் மனங்களில் வாழும் உங்களை மறக்கும் நாள் எங்களது உயிர் போகும் நாள்........

ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திரநிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் அற்புதமான நிகழ்வு உண்மையில்
ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு
என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச்
சக்தியாக மற்றவர்களை பற்றிக்கொள்கிறது ஒரு இனத்தின் தேசிய ஆண்மாவைத்
தட்டியெழுப்பிவிடுகிறது.

வெள்ளி, 22 ஜூலை, 2011

கறுப்பு ஜூலை கொடூரத்தின் 27 ஆவது நினைவு நாள் அதே 23 இல் இன்று தமிழரின் தலைவிதி நிர்ணயம்.

1983 ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புதினம்.இரத்தக்கறை படிந்த நாள் . பேரினவாதிகள் மிருகங்களாக மாறி தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகு நாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலையுண்ட 27 ஆவது நிறைவு நாள். இன்றும் ஜூலை 23. தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாள்.

27 ஆண்டுகளுக்கு முன் 1983 ஜூலை 23 ஆம் திகதி முதல் சுமார் ஒருவார காலம் நாடு முழுவதும், குறிப்பாக தலைநகரில் தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட, எரியூட்டப்பட்ட கொடூரமிக்கக் காட்சிகள் கண்முன் விரிகின்றன. அந்த சில நாள்களில் 3ஆயிரம் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். 25ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனம் அல்லது காயங்களுக்கு இலக்காகினர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வீடுகள், வர்த்தக நிலையங்களை இழந்து நிர்க்கதியாகினர். இந்த அக்கிரமம், அராஜகம், காடைத்தனங்களைப் புரிந்த பேரினவாதிகள் குதூகலித்து ஆரவாரித்து கொண்டாடியதை எப்படி மறப்பது?துயரம் மிகுந்த அந்த நினைவு நாளில் இன்று தமிழன் தன் தலைவிதியை நிர்ணயிக்கத் தயாராகிவிட்டான். தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவை சர்வதேசம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. தமிழரின் விடிவு அவர்களின் கைகளில் தான்!

வியாழன், 21 ஜூலை, 2011

இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்.

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ என்ன செய்கின்றானோ என்று தெரியாது. அவனது வீட்டு வாசலில் போய் நின்றேன். நாலு, ஐந்து பனை மட்டை களால் கட்டப்பட்ட படலையினூடாக கொட்டில் வீட்டைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தது எப்படியாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என நினைத்து எனது மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். உள்ளே இருந்து ஓர் அம்மா வந்து யார் தம்பி என்றார். அவனது சொந்தப் பெயரை மறந்ததால் அவனது புனைப் பெயரைக் கூறி வீரா இல்லையா என்றேன். நான் அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டதால் அந்த அம்மா எந்தவித தயக்கமும் இன்றி அப்படி ஒருவர் இல்லை என்று கன்னத்தில் அறைந்த மாதிரி பதிலைச் சொல்லி விட்டு கொட்டிலுக்குள் சென்றுவிட்டா.
 

திங்கள், 11 ஜூலை, 2011

எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போக..................!!!!?

உவங்கள் எங்கட தமிழ்ச் சனத்தை என்னடா கேக்கிறாங்கள்…?’ என்றபடியே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் முகத்தார்.


‘காலங்காத்தால கடகத்திலை ஏத்திக்கொண்டு வந்திட்டியளோ…?’ என்று வழக்கமான நக்கலுடன் முகத்தாரை வரவேற்றார் அப்புக்குட்டியர்.

புதன், 29 ஜூன், 2011

தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள்???

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சி தொடங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. சுதந்திரமாக இயங்கிய வன்னி வீழ்ச்சி அடைந்து இரு வருடங்களுக்கு மேலாகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தாயகம் முழுவதும் இன்று அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர முடியும்.

செவ்வாய், 21 ஜூன், 2011

இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே............................

சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா?

ஞாயிறு, 5 ஜூன், 2011

அண்ணன் இன்னும் சாகவில்லை….!

அன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!
என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

சனி, 4 ஜூன், 2011

எமது இனம் எழுந்துநின்று போர்க்கோலம் கொண்ட காலத்தின் அடையாளங்கள் அவர்கள்,,,

நிழற்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம்குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்கள இராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை நிழற்படத்தில் காணும்போது இதயம் சுக்குநுறாக வெடிப்பது போலவே இருக்கிறது.

புதன், 1 ஜூன், 2011

தமிழினப்படுகொலை - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் !!!!!!!

ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து பல புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழ் உணர்வாளர்கள் இன்று பெல்ஜியம் நாட்டின் புறுசெல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடியுள்ளனர்.

சனி, 21 மே, 2011

வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது......

ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். தமிழ் மக்களினுடைய அரசியல் இருப்பையும் பாதுகாத்திருக்க முடியும். ஐ.நா செயலாளர் தனக்குள்ள அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தியிருக்க முடியும்.
போருடன் மக்களின் உயிர் அழிவு,

இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் இரண்டாம் ஆண்டு நினைவும், ஆத்ம சாந்தி பூஜையும் 20.05.2011 அன்று Leicester முருகன் கோவிலில் மிகவும் அமைதியாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. நிறைவில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் திரு.தயாபரன் ( ஜனகன் மாஸ்டர் ) அவர்கள் தேசத்தின் பாலம் ஈழ மண்ணில் ஆற்றும் பணிகள் பற்றி விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் வரை நின்று களமாடிய போராளி ஒருவர், அங்கு மக்கள் பட்ட துயரங்களை அங்கு வந்திருந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது.


இப் பூசையினை தேசத்தின் பாலம் அமைப்பினரும், முன்னாள் போராளிகளும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஐ.நாவின் 196 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்ன?

ஐரோப்பிய செய்தியாளர்ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த 12 ஆம் நாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ள நிலையில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்

வெள்ளி, 18 மார்ச், 2011

லெப் கேணல் வானதி /கிருபா (நித்தியகரன் - மாலதி) 02 ம் ஆண்டு நினைவலைகள்( 21 / 03/ 2011)

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது
தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது ..குடும்ப வாழ்வில் இணைந்த பெண்  போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா ,,லெப் கேணல் கமலி ,,மேஜர் சுடரேந்தி ,,லெப் கேணல் வரதா ,,கேணல் தமிழ் செல்வி,, லெப் கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப் கேணல்  வானதி /கிருபா ம் இணைந்து கொண்டாள். ஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் ,,,தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்.....!!!!!!!!

திங்கள், 21 பிப்ரவரி, 2011

எங்கள் ஈழத்தாயே சென்று வா…..!

உலகே உனக்கு கண்ணில்லையா?
எங்கள் தமிழிழ மண் என்ன மண்ணில்லையா?
பண்டார வன்னியன் மண்ணிலே!
படுத்துறங்கும் எங்கள் தலைவனின் கருவரைக்கு
இன்று இறுதி ஊர்வலம்

உலகாண்ட பரம்பரையின் அன்னை
எம் மண்ணில் உயிர் பிரிந்தால் -ஆனால்
உறவுகள் கூடி அழுவதற்கே உரிமையில்லை
அனாதைகலானோமே என்று அழுகுதம்மா
உந்தன் தமிழ் குடி

ஆறுதல் சொல்வதற்கோ யாருமில்லை
குடும்பமே அழிந்ததென்று கொக்கரிக்கும்
குள்ளநரிக் கூட்டங்களும் உலாவுதம்மா
எட்டி நின்று ஏங்குதங்கே
உந்தன் கொள்ளிக் குடம்
அதை எடுத்துவர முடியவில்லை என்று
ஈனத் தமிழினத்தின் விடுதலைக்கு
உன் வீர இளையமகன் கொடுத்த விலை
யாரரிவார் தாயாரே


வானவரும் மண்ணவரும் சூழ்ந்து நின்று
புனிதரும் மனிதரும் பூக்கள் தூப
உலக நாட்டு தலைவரேல்லாம்
இரங்கள் பா கூறி
சந்தனப் பேளையிலே தலைவனும் தளபதிகளும்
சுமந்து செல்வதாய் நினைத்து உன்னை
வழியனுப்பி வைக்கின்றோம் தாயே
பாலைவனமோ வான் கடலோ
பாருலகில் எங்கேயோ
எங்கள் தலைவனின் பார்வை படும் என்று நம்பி
வழியனுப்பி வைக்கின்றோம் தாயே…….